இலங்கையில் இருந்து வந்த தமிழர்களின் ஆசனவாயிலை சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பில் இருந்து வந்த 4 தமிழர்கள் ஆசனவாயிலில் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அஸ்ரத் (24), இஸ்மாயில் (27) உட்பட நான்கு பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் சென்னைக்கு திரும்பி வந்தபோது அதிகாரிகளுக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு உடமைகளில் சோதனை செய்தனர். ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் நான்கு பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.

அவர்களது ஆசனவாயில் ரப்பர் ஸ்பாஞ்ச் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் தங்க துண்டுகள் இருந்தன.

நான்கு பேரிடமும் தலா 300 கிராம் வீதம் 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு 40 லட்சம்.

தற்போது, இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்