இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான் கண்ட காட்சிகள்: பாதிரியாரின் அதிர்ச்சிப் பேட்டி!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க ஆலயங்களின் கார்டினல் மால்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

இலங்கையில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த ஆலயங்கள் மற்றும் முக்கியமான ஹோட்டல்கள் என அடுத்தடுத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் நடத்தப்பட்டது.

இதில் தற்போது வரை 200க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதோடு, 450க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவம் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த புனித செபாஸ்டியன் தேவாலய தலைமை பாதிரியார், ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் அவர்களுடைய உடல்சிதறி துண்டுகளாக சுவர்களில் தூக்கியெறியப்பட்டன என கூறியுள்ளார்.

இலங்கை கத்தோலிக்க ஆலயங்களின் கார்டினல் மால்கம் ரஞ்சித், மிகவும் பாரபட்சமற்ற வலுவான விசாரணையை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், விலங்குகள் மட்டுமே ஈடுபடும் இத்தகைய இரக்கமற்ற முறையிலான செயலுக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்