உடல் முழுவதும் குண்டுகளுடன் அந்த பயங்கரவாதி வந்தான்: கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவம்.... மேலாளர் வெளியிட்ட தகவல்!

Report Print Vijay Amburore in இலங்கை

தற்கொலைக் குண்டுதாரி வெடித்துச் சிதறடிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கையின் சினமன் கிரான்ட் ஹோட்டலில், சிற்றுண்டிக்காக ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு வரிசையில் பொறுமையாக காத்திருந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ள 8 வெடிகுண்டு தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் பலியானதோடு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தற்போது வரை 7 பேரை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான சினமன் கிரான்ட் ஹோட்டலின் மேலாளர் கூறுகையில், முன்தினம் இரவு அந்த பயங்கரவாதி முகம்மது அஸ்ஸம் முகமத் என்கிற போலியான பெயரில் பதிவு செய்திருந்தார்.

காலை 8.30 மணிக்கு குடும்பங்கள் நிறைந்து காணப்பட்டது. உணவு சாப்பிடுவது போல கையில் ஒரு தட்டுடன் அவர் வரிசையில் முன்வந்தார்.

அவருடைய முதுகு பகுதியில் குண்டுகளால் நிரப்பப்பட்டிருந்த பை ஒன்று இருந்தது. வரிசையின் முன்பகுதிக்கு வந்ததும் அந்த குண்டுகளை வெடிக்க செய்தார். விருந்தினர்களை வரவேற்கும் எங்கள் மேலாளர்களில் ஒருவரும் அதில் உடனடியாக கொல்லப்பட்டார்.

இதில் அந்த குண்டுதாரியும் உயிரிழந்தான். அவனது உடலின் பாகங்கள் பொலிஸால் அப்படியே எடுத்துச்செல்லப்பட்டன என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இலங்கை நபர், வியாபாரத்திற்காக நகரத்திற்கு வந்திருப்பதாக கூறி பொய்யான முகவரியை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்