குண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்! இறப்பதற்கு முன் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், லண்டனில் படித்து வந்த இலங்கை பெண் பலியாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகிருப்பதாகவும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த பிரபல பெண் சமையல் நிபுணர் Shantha Mayadunne மற்றும் அவரின் மகள் Nisanga பலியாகிவிட்டதாக செய்திகள் வெளியானது.

இவர்கள் குண்டு வெடிப்பு நடந்த Shangri-La ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இறந்த Nisanga லண்டனில் படித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இறந்த Nisanga லண்டனில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் என்பது அவருடைய சமூகவலைத்தள பக்கங்களை பார்த்த போது தெரியவந்தது.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் Nisanga தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஈஸ்டர் திருநாளனன்று தன்னுடைய குடும்பத்தினருடன் காலை உணவு என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னரே அவர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்துள்ளார்.

Nisanga குறித்து இலங்கையைச் சேர்ந்தவரும் துபாயில் இருப்பவருமான Radha Fonseca(34) என்பவர் கூறுகையில், இவர்களின் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

கல்லூரியில் Nisanga மிகவும் பிரபலமானவள். ஏனெனில் அவளுடைய அம்மா சமையல் கலை நிபுணர் என்பதால் அவளை அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமின்றி அவள் நல்ல பெண், அனைவரிடமும் அன்பாக பழகும் குணமுடையவள் என்று கூறியுள்ளார்.


மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்