இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து உயிர் தப்பிய இளம் பெண்... ஹோட்டலில் நடந்தது என்ன? பரபரப்பான நிமிடங்கள்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தப்பிய பெண் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்களால் 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் Shangri-La ஹோட்டலில் நடந்த வெடி குண்டு சம்பவத்தின் போது அந்த ஹோட்டலில் இருந்து தப்பிய Sarita Marlou என்ற பாடகி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நடந்தது என்ன என்பதை அப்படியே குறிப்பிட்டுள்ளார்.

அதில், நான் ஹோட்டலின் 17-வது தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது.

அதன் பின் சில நிமிடங்களில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த ஹோட்டல் ஊழியரகள் உடனடியாக ஹோட்டலை விட்டு வெளியேறும் படி கூறினர்

இதனால் நாங்கள் வெளியில் வந்த போது, அந்த மூன்றாவது தளத்தில் இரத்தம் சிதறிய நிலையிலும், சேர்கள் ஆக்காங்கேவும் பறந்து கிடந்தன.

அதன் பின் பின்னரே நாங்கள் நிலையை உணர்ந்தோம். நாங்கள் வெளியில் வந்த சில மணி நேரங்களில் அருகில் இருக்கும் Cinnamon Grand மற்றும் The Kingsbury ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தை அறிந்தோம்.

இருப்பினும் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு நாங்கள் உண்மையில் நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் எங்களை நல்ல படியாக வெளியில் கொண்டு வந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்