தொடரும் பரபரப்பு.. இலங்கையின் முக்கிய விமானநிலையத்தில் பைப் குண்டு! பொலிசார் குவிப்பு

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் முக்கிய விமானநிலையத்தில் பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால், மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எட்டு இடங்களில் நடந்த வெடி குண்டு சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கிய விமானநிலையமான காட்டுநாயக்கன் விமானநிலையத்தில் பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவலில், நாட்டின் தொடர்ந்து நடந்த வெடி குண்டு சம்பவத்தை தொடர்ந்து விமானநிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்பட்டுத்தப்பட்டிருந்தன.

அதன் படி அதிகாரிகள் வழக்கமாக விமானநிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தான் இந்த பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 அடி நீளம் கொண்ட பிவிசி பைப்பின் உள்ளே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதன் பின் இது குறித்து தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், அங்கு விரைந்து வந்த Bomb squad அதை செயலிழக்க வைத்து அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதைத் தொடர்ந்து விமானநிலையம் மூடப்பட்டு பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்