இலங்கை மக்களை கண்ணீரில் ஆழ்த்திய குண்டு வெடிப்பு.. வெளிநாட்டு நெட்வோர்க்கை கண்டு பிடிக்க இலங்கை எடுத்துள்ள அதிரடி முடிவு

Report Print Santhan in இலங்கை

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் காரணமாக வெளிநாட்டு நெட்வோர்க்கை கண்டுபிடிக்க உலகநாடுகளின் உதவியை நாடுகிறோம் என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

இலங்கையில் தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய அமைப்பு என அந்நாட்டு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3 குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது எனவும், இது போன்ற தாக்குதலை வெளிநாட்டு நெட்வோர்க் உதவியின்றி நடத்தியிருக்க வாய்ப்பு இல்லையெனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உள்ள வெளிநாட்டு நெட்வோர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறோம் என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்..

இலங்கை முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்த சிறிசேனா, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் வெளிநாட்டு தொடர்ப்பை கண்டறிய உலக நாடுகளின் உதவியை இலங்கை கோரும் எனக் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்