முதலில் குறி வைத்தது தமிழ்நாட்டிற்கு தான்.. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளியான பரபரப்பு தகவல்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கும் நிலையில், இந்த தாக்குதலில் முதல் குறி தமிழ்நாடாகத் தான் இருந்துள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகைக்காக நேற்று ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் இதுவரை 290 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாகரம் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்திய விசாரணையில் சில பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில், இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் அமைப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் யார், என்ன என்பது குறித்தெல்லாம் தேசிய புலனாய்வு பிரிவு படையினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 6 மாதத்திற்கு முன்பு சிக்கிய ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவர், இலங்கையில் தற்போது குண்டுவெடிப்பை நிகழ்த்திய இயக்கம் பற்றி சில விஷயங்களையும் கூறியுள்ளார்.

அந்த தீவிரவாத அமைப்பின் நோக்கம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள்தான் என்பதும், வெறும் தேவாலயங்களை குறி வைத்துதான் இந்த தாக்குதல் சதிதிட்டம் நடந்து வருவதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

முன்னதாக இந்த சதித் திட்டத்தை தமிழகத்தில் நடத்த தீர்மானித்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதற்காக சிலரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அந்த இளைஞர்கள் பின்வாங்கியுள்ளனர். அதன் பின்னரே இந்த சம்பவத்தை இலங்கைக்கு மாற்றியுள்ளனர்.

இலங்கையில் ஈழ இறுதிப் போருக்குப் பின்னர் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளும் கூட தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் கூட அதிகரித்துள்ளது. இதை மனதில் வைத்துத்தான் இலங்கையை குறி வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

என்ஐஏ விசாரணை அடிப்படையில் தான் இலங்கையை இந்தியாவும் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததால் இன்று மிகப் பெரிய சேதத்தை இலங்கை சந்தித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers