இலங்கையில் அவசர நிலை பிரகடனம் வருவதற்கு முன்னே வீட்டிற்குள் பதுங்கிய மக்கள்! வெறிச்சோடி காணப்படும் சாலைகளின் வீடியோ

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் இன்று அவரச நிலை பிரகடனம் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னரே வீதிகள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நாட்டின் தேவாலயம் மற்றும் ஹோட்டல்கள் என மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதனால் 290-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் முற்றிலும் ஒரு தற்கொலைப் படை தாக்குதல் எனவும், இதன் பின்னணியில் வெளிநாட்டு நெட்வர்க் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வரவுள்ளது. இதனால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் இன்னும் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வருவதற்கே இரண்டு மணி நேரங்கள் உள்ள நிலையில் இப்போதே நாட்டின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் வெறிச் சோடி காணப்படுகின்றனர்.

பெரும்பாலான இப்போதே வீட்டிற்கு செல்வது தான் பாதுகாப்பு என்று கூறிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்