இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு: மன்னிப்பு கோரிய அரசு

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சமும், காயமடைந்தவர்களுக்கு காயத்தை பொறுத்து, தலா ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என இலங்கை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்