இந்திய ஊடகங்களை இணையத்தில் வறுத்தெடுக்கும் இலங்கை மக்கள்!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் இந்திய ஊடகங்களை இலங்கை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஈஸ்டர் தினத்தை கொண்டாடுவதற்காக ஆலயத்தில் குழுமியிருந்த மக்கள் மீதும், வெளிநாடுகளில் இருந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப்பயணிகள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போது வரை 290 பேர் உயிரிழந்திருப்பதோடு, ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து இலங்கை அரசும் எந்தவித தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால் இந்திய ஊடகங்கள் அதற்குள்ளாக குறிப்பிட்ட மதத்தையும், அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தான் தாக்குதலை நடத்தியுள்ளனர் என செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அருணி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய ஊடகங்கள் மற்றும் சில இந்திய அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் நலனுக்காக இலங்கையின் துயரத்தைப் பயன்படுத்தி கொள்வது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.

"இந்தியர்கள் போலிச் செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களது ட்விட்டர் பதிவுகள் குறித்து புகாரளியுங்கள்" என்று டக்ஷிகா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்