இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யாரால் ஈர்க்கப்பட்டார்கள்? வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Zahran Hashim என்ற தற்கொலை குண்டுதாரி ஷங்ரி்லா ஹொட்டலில் தாக்குதலில் ஈடுபட்டவர் என தெரியவந்ததையடுத்து அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

என்டிஜே அமைப்பின் செயலாளர் அப்துல் ரஜிக் மத அமைதியின்மையை தூண்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பலமுறை கைது செய்யப்பட்டவர்.

மேலும், 2016 ஆம் ஆண்டு ரஜிக் கைது செய்யப்படவில்லை என்றால் பௌத்த குழு தலைவர் Galagodaatte Gnanasara தலைமையில் ரத்த குளியல் நடக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையில் நடைபெற்ற இந்த தொடர்குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிக உயிரிழப்பு இருக்க வேண்டும் என திட்டமிட்ட அவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டுஇந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்