இலங்கை குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழப்பு: எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இன்றைய காலைநேர நிலவரப்படி 359 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 500க்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழப்பதால், எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஹொட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் வெடிகுண்டு தாக்குதுல் நடக்கும் என இலங்கைக்கு உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்