இலங்கை விமானநிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடி குண்டு கண்டுபிடிப்பு... தொடரும் பதற்றம்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததாக தகவல் வெளியான நிலையில், அது உண்மையில்லை எனவும் பொலிசார் சிறிய ரக வெடியை வெடிக்க வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு வெள்ளவத்தை அருகே சவோய் திரையரங்கம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு உள்ளதா என பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இருசக்கர வாகன பெட்டியை திறக்க முடியாததால் பொலிசார் சிறிய ரக வெடியை வைத்து வெடிக்க செய்தனர்.

அதன் பின்னரே இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு இல்லாதது உறுதியானது.

இந்நிலையில் காட்டுநாயக்க விமானநிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையினர் நடத்திய சோதனையிலே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இது செயலிழக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்