இலங்கை குண்டுவெடிப்பில் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்: கண்ணீர்க் கடலில் உற்றார் உறவினர்கள்

Report Print Arbin Arbin in இலங்கை
743Shares

ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 8 மாத குழந்தையின் சடலம் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று ஐ.எஸ் ஆதரவு தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு மேற்கொண்ட தொடர் கொலைவெறித் தாக்குதலில் 45 சிறார்கள் உள்ளிட்ட 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 69 வயதான ஆக்னஸ் Vnikpridha என்பவரும், அவரது பேரக்குழந்தை 8 மாத மேத்யூவும் குறித்த தாக்குதலில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதே தேவாலயத்தில் ஈஸ்டர் ஆராதானையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் மட்டும் சுமார் 110 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலில் குழந்தை மேத்யூவின் தாயார் 37 வயதான திஸ்னா ஸ்ரீமலி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

குழந்தை மேத்யூவின் சவப்பெட்டி அருகே கண்ணீர் விட்டு கதறும் திஸ்னா ஸ்ரீமலியை உறவினர் தேற்றியது, பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

வாழ்க்கையில் பல துயரங்களை எதிர்கொண்டு மீண்ட சனம் என்றாலும், மீண்டும் அதுபோன்றதொரு துயரச் சம்பவம் கண்ணெதிரே அரங்கேறுவது பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

நீர்கொழும்பு புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேவாலயத்தின் கீழிலுள்ள மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்