நாங்கள் எதிரி அல்ல... இலங்கையில் அச்சம் காரணமாக மசூதியில் அடைக்கலம் தேடும் இஸ்லாமியர்கள்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்ததால், இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.

குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 390 பேர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அங்குள்ள் இஸ்லாம் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்துள்ள அதே நேரத்தில் அங்குள்ள இஸ்லாமியர்களிடம் அச்சம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக பலர் வெளியே செல்லாமால் மசூதிகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சரினா பேகம் என்ற பெண்மணி கூறுகையில், எனக்குத் தெரியும் மக்கள் இஸ்லாமியர்கள் மீது கோபமாக இருப்பார்கள்.

இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் இவ்வளவு வெறுப்பு மிக்கவர்களாக இருந்திருப்பார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். நான் வெளியில் செல்வதற்கு அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அமீர் என்பவர் கூறுகையில், நாங்கள் தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறோம். எங்களது மத அடையாளத்தைக் கண்டு அவர்கள் எதிரிகளாக நினைப்பார்கள். நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல. இது எங்களின் தாய் நாடு. இது ஆசியாவின் முத்து என்று அறியப்படுகிறது. இதையே நாங்களும் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்