கொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பு சின்னமன் ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்காக இஷாப் இப்ராகிம் என்ற தற்கொலை குண்டுதாரி ஹொட்டலுக்குள் சென்றபோது தனது கால்கள் ஒன்றோடு மோதி சிறிது தடுமாறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன்களான இஷாப் இப்ராகிம் மற்றும் இலாம் இப்ராகிம் ஆகிய இருவரும் சின்னமான் ஹொட்டல் மற்றும் ஷங்கரில்லா ஆகிய ஹொட்டல்களுக்கு முந்தைய நாள் இரவே சென்று தங்களது பெயரை போலியாக பதிவு செய்து, அடுத்தநாள் எவ்வாறு தற்கொலை தாக்குதல் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

அதன்பின்னர் தான் ஈஸ்டர் பண்டிகையன்று இஷாப் சின்னமன் ஹொட்டலிலும், இலாம் ஷங்கரில்லா ஹொட்டலில் சென்று தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், சின்னமன் ஹொட்டலுக்குள் இஷாப் நுழைந்தபோது அவர் தடுமாறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உணவகத்தில் அனைவரும் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கையில் வெடிமருந்து பையுடன் செல்லும் இஷாப்பின் கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், முன்னோக்கி சென்றவர் மீண்டும் பின்நோக்கி வந்துள்ளார்.

அதன் பின்னர் தனது நிலையை சரிசெய்துகொண்டு வெடிகுண்டினை வெடிக்க செய்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்