1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பு சின்னமன் ஹொட்டலில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரி இஷாப் மற்றும் அவரது குடும்ப பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கோடீஸ்வரரின் மகனான இஷாப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் தனது தொழில்ரீதியாக விருதினையும் வாங்கியுள்ளார்.

37 வயதான இவருக்கு திருமணமாகி 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு 8 வயதும், ஏனைய 3 மகன்கள் 6 முதல் 2 வயதுக்குட்பவட்டவர்கள். கொழும்பில் £1.5 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

உடற்பயிற்சி மையம், விலை உயர்ந்த் கார்கள் உட்பட பல்வேறு வசதிகள் இவரது வீட்டில் இருந்துள்ளன. மிகவும் அமைதியான நபர் அருகில் வசிப்பவர்களால் அறியப்பட்ட இவர் , தாக்குதலுக்கு செல்வதற்கு முன்னர் வர்த்தகம் ரீதியாக செம்பியாவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு கூறிவிட்டு சென்றுள்ளார்.

இவ்வாறானதொரு கோழைத்தனமான தாக்குதலுடன் தனது கணவர் தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பில் முன்னரே அறிந்திருந்தால் அது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்திருப்பேன் என மனைவி பாத்திமா தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...