இலங்கை கம்பஹா பகுதியில் சற்றுமுன் குண்டு வெடிப்பு சம்பவம்: பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Kavitha in இலங்கை

இலங்கையின் கம்பஹாவில் உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு பின் பக்கத்தில் உள்ள குப்பை கிடங்கில் சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பூகொட நீதிமன்றத்தின் பின்பக்கத்தில் இருக்கும் காலி நிலத்தில் உள்ள குப்பை கிடங்கில் சற்றுமுன்னர் குண்டு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்