இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வந்த அதிரடி தடை உத்தரவு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்களும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபை இது தொடர்பான அறிவுறுத்தலை இன்று விடுத்துள்ளது.

இதோடு, இலங்கையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் உடனே அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஆளில்லா விமானங்கள் பறக்கவிடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சிவில் விமான சேவை அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்