வெடிகுண்டு வெடிக்க தவறியதால் தப்பிய ஏராளமான உயிர்கள்: வெளியான தகவல்!

Report Print Balamanuvelan in இலங்கை
3657Shares

பிரபல நட்சத்திர ஹொட்டலில் வைக்கப்பட இருந்த குண்டு குறித்த நேரத்திற்கு வெடிக்காததால் ஏராளமான உயிர்கள் தப்பிய ஒரு செய்தி கிடைத்துள்ளது.

Abdul Lathief Jameel Mohamed என்னும் தீவிரவாதி இலங்கையின் பிரபல நட்சத்திர ஹொட்டலான Taj Samudra ஹொட்டலில் குண்டு வைக்க முயன்றதும், அந்த குண்டில் குளறுபடி ஏற்பட்டதால், அந்த ஹொட்டலில் தங்கியிருந்த ஏராளமானோர் உயிர் தப்பியதும் தெரிய வந்துள்ளது.

Abdul Lathief Jameel Mohamed என்னும் அந்த தீவிரவாதி, Taj Samudra ஹொட்டலில் தங்கியிருந்து, பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது, வெடி குண்டுகள் நிரம்பிய தனது பையை வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் அந்த குண்டு வெடிக்காததோடு, ஹொட்டல் ஊழியர் ஒருவர் Abdul Lathief தனது பையை விட்டுச் செல்வதை கவனித்து, அதை எடுத்து அவரிடமே கொடுத்திருக்கிறார்.

தான் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றுகிறோம் என்பது தெரியாமலே அந்த ஹொட்டல் ஊழியர் ஆற்றிய பொறுப்பான கடமையால் ஏராளமானோர் உயிர் தப்பியிருக்கிறார்கள்.

வெடி குண்டுகள் நிரம்பிய அந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பிய Abdul Lathief, Dehiwala என்னும் பகுதியில் அமைந்துள்ள Tropical Inn என்னும் சிறிய கெஸ்ட் ஹவுசுக்கு சென்று, வெடிக்காத குண்டில் என்ன பிரச்சினை என்று சோதித்திருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்திருக்கிறது.

அந்த சம்பவத்தில் Abdul Lathief உயிரிழந்ததோடு, அந்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த ஒருவரும் உயிரிழந்திருக்கிறார்.

ஒருவர் உயிரிழந்ததும் வருத்தத்திற்குரிய விடயம்தான் என்றாலும் Abdul Lathief Taj Samudra ஹொட்டலில் அந்த வெடி குண்டை வெடிக்கச் செய்திருந்தால் பலியானோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும். இந்த Abdul Lathiefதான் பிரித்தானியாவில் கல்வி பயின்றதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்