கடவுள் இல்லை.. உதவாமல் வீடியோ எடுத்தனர்! இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிக்கொடுத்த மகள் கண்ணீர் விட்டு கதறல்

Report Print Santhan in இலங்கை

இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிகொடுத்த இரண்டு மகள்கள் கடவுளே இல்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளது, பார்ப்பவர்கள் கண்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த வெடி குண்டு சம்பவத்தால் தற்போது வரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதில் பிரித்தானியாவைச் சேர்ந்த 8 பேர் என வெளிநாட்டினர் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தந்தையை பறிகொடுத்து, அதிலிருந்து தப்பிய க்ளோரி சார்ஜ் மற்றும் அவரது சகோதரி ஜார்ஜ் ஆகியோர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.

அப்போது அவர்கள் கடவுள் இல்லை, அப்போது யாரும் வந்து உதவவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

தொடர்ந்து கூறுகையில், ஞாயிற்றுக் கிழமை நடந்த வெடிகுண்டு சம்பவத்தால் என்னுடைய காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கு பலரின் உடல்கள் இரத்தம் வழிந்த நிலையில் சிதறி கிடந்தன.

அப்போது தேவாலயத்தின் உள்ளே இருந்த சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். உதவ முன்வரவில்லை, என் அப்பா இரத்த வெள்ளத்தில் இருக்கிறார், அவரது இரத்தம் என்னுடைய கையில் என்று கண்ணீர் விட்ட அவர் தொடர்ந்த போது, அவர் எனக்கு நல்ல நண்பர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரது சகோதரி எதுவும் பேசாமல் கண்ணீர் விட்டு அழுக, உடனே க்ளோரி சார்ஜ் அவரை ஆறுதல் படுத்துகிறார்.

ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன், கடவுள் இல்லை, யாரும் உதவ முன்வரவில்லை என்று அதற்கு மேல் பேசமுடியாமல் முடித்துக் கொண்டனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...