வெடிகுண்டு தாக்குதலில் அதிக குடும்ப உறுப்பினர்களை இழந்த பெண்... இரத்தத்துடன் கலந்து வந்த கண்ணீர்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை இழந்துள்ள பெண் இனி நான் அனாதையாக தனியாக வாழவேண்டும் என வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்து தவித்து வருகிறார்கள்.

இதில் அதிகளவிலான குடும்ப உறுப்பினர்களை இழந்தவர் அனுஷா குமாரி என்ற பெண்ணாக தான் இருக்கும்.

ஏனெனில் அனுஷாவின் கணவர், இரண்டு பிள்ளைகள் மற்றும் மூன்று சகோதர, சகோதரிகள் என 6 பேரை வெடிகுண்டு தாக்குதலில் பறிகொடுத்துள்ளார்.

இந்த தாக்குதலில் அனுஷாவுக்கும் பலமாக அடிப்பட்டுள்ள நிலையில் அவரின் வலது கண்ணில் பேண்டேஜ் போடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுஷா குடும்பத்தாரின் இறுதிசடங்களில் அழுதபடி வந்து கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், நீங்கள் நம்ப மாட்டீர்கள், எனக்கு சரியான மற்றும் அழகான குடும்பம் அமைந்தது.

என் 24 வருட திருமண வாழ்வில் ஒருமுறை கூட என் கணவருடன் வாக்குவாதம் செய்ததில்லை.

இப்போது நான் எல்லாரையும் இழந்துவிட்டேன், எல்லோருக்கும் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள், ஆனால் எனக்கு யாருமே இல்லை என அனுஷா கூறும் போது அவர் கண்ணில் கட்டியுள்ள பேண்டேஜில் இருந்து இரத்த துளிகளுடன் கண்ணீரும் கலந்து வருகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...