தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா? முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் பாராளுமன்றம் தொடர்பிலான முக்கிய ஆவணங்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா என்ற பகீர் கேள்வியை எழுப்பியுள்ளது.

பாலங்கொட பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், அவர் முரணான தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது உடைமைகளை சோதனையிட்ட பொலிசார், அவரிடம் இருந்து பாராளுமன்றத்திற்குள் நுழையும் அனுமதிச் சீட்டுகள் 6 எண்ணிக்கையிலும், 3 மொபைல் போன்கள், பல எண்ணிக்கையிலான சிம் அட்டைகள், 2 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் T-56 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றியுள்ளனர்.

மட்டுமின்றி சந்தேக நபருக்கு தொடர்புடையதாக கருதப்படும் லொறி ஒன்றையும் பொலிசார் மடக்கியுள்ளனர்.

கைதான இளைஞரை இன்று பாலங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பாலங்கொட பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கும், தற்போது பாராளுமன்ற நுழைவுச் சீட்டுடன் கைதான நபருக்கும் தொடர்பு உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...