என் கண்முன்னே அது நடந்தது... இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் கண்ணீர் பதிவு

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கை, நீர்கொழும்பு செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தமது மனைவி மற்றும் ஒரே மகளை பறிக்கொடுத்த நபர் கண்ணீருடன் நடந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியிருக்கும் 46 வயதான சுதேஷ் கொலோன் என்பவரே ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகளின் தொடர் தற்கொலைத் தாக்குதலில் மகள் மற்றும் மனைவியை இழந்து தனித்து விடப்பட்டவர்.

சம்பவத்தன்று நீர்கொழும்பு செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் உள்ளே இருக்கைகள் இல்லாத காரணத்தால் மனைவி மற்றும் மகளை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு, சுதேஷ் கொலோன் எஞ்சிய விசுவாசிகளுடன் தேவாலயத்தின் வெளியே நின்று ஆராதனைகளில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது திடீரென்று குண்டு வெடித்துள்ளது. கூடவே மரண ஓலவும் எழுந்துள்ளது.

அதிர்ச்சியில் உறைந்த சுதேஷ், உடனடியாக தேவாலயத்தின் உள்ளே விரைந்துள்ளார். புகைமூட்டமாக காணப்பட்ட அந்த தேவாலயத்தின் உள்ளே, தமது மனைவியையும் அருமை மகளையும் தேடியுள்ளார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர், சுதேஷ் குற்றுயிராக கிடந்த தமது மகளை கண்டுபிடித்துள்ளார்.

அவர் அருகாமையிலேயே உயிருக்கு போராடிய நிலையில் 45 வயதான Manik Suriyaaratchi கிடந்துள்ளார்.

உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார் சுதேஷ். ஆனால் தேவாலயத்தில் வைத்தே சுதேஷின் 10 வயது மகள் அலெக்சாண்டிரியா இறந்துள்ளார்.

மருத்துவமனை செல்லும் வழியில் Manik Suriyaaratchi இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பெளத்த மத நம்பிக்கை கொண்ட சுதேஷ் மற்றும் கத்தோலிக்கரான மாணிக் தம்பதிகள் காதலித்து கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரும் தங்களது மகளுடன் கடந்த 2014 ஆம் ஆண்டே இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது நீர்கொழும்புவின் தென் பகுதியில் தமது மகள் மற்றும் மனைவியை நல்லடக்கம் செய்துள்ளார் சுதேஷ்.

நீர்கொழும்பு செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை அந்த தேவாலயத்தில் உள்ள கல்லறையில் மொத்தமாக நல்லடக்கம் செய்துள்ளனர்.

பொதுமக்களிடம் இன்னும் அந்த தொடர் தாக்குதலின் அச்சம் விலகவில்லை என்பது மட்டுமல்ல,

மேலும் தாக்குதல் தொடரலாம் எனவும் அச்சத்தை பலரும் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...