கொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு

Report Print Raju Raju in இலங்கை

கொழும்பில் சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், சிறப்பு அதிரடிப்படை பொலிசார் சேர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்டார்கள

இதையடுத்து அங்கு ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் இலங்கையின் நுவரெலியா நகரில் உள்ள ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்