தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்

Report Print Arbin Arbin in இலங்கை

கொழும்பு, சின்னாமன் கிராண்ட் ஹொட்டலில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஏற்கெனவே பொலிசாரிடம் சிக்கியவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, குறித்த நபரின் சகோதரர் அரசிடம் இருந்து விருது பெற்றமையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இல்ஹாம் அகமது இப்ராஹிம் என்பவரே பொலிசாரால் முன்னர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

இவரது சகோதரர் 38 வயதான இன்ஷாப் இப்ராஹிம் தமது தந்தையுடன் இணைந்து கடந்த 2016 ஆம் ஆண்டு அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்து ஏற்றுமதிக்கான சிறப்பு விருதினை பெற்றுள்ளார்.

தொடர்புடைய புகைப்படங்கள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 359 அப்பாவி மக்களின் உயிரைப்பறித்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகளால் முதலில் அடையாளம் காணப்பட்டவர்கள் இந்த இப்ராஹிம் குடும்பத்தாரே.

தற்போது பெரும் வணிகரான இப்ராஹிம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...