இலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் குண்டுவெடித்த நிலையில் அங்கு சென்ற தன்னுடைய தாய் மாயமாகிவிட்டதாக கூறும் நபர் இதற்காக ஜோதிடர்கள் மற்றும் குறி சொல்பவர்களை நாடியுள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்துள்ளனர்.

குண்டு வெடித்த இடங்களில் ஒன்றான கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு இலங்கை தமிழரான வினோத் சரோஜினி (27) என்பவரின் தாய் வேலுசாமி சென்ற நிலையில் மாயமாகியுள்ளார்.

இதையடுத்து தனது தாய் எங்குள்ளார் என்பதை அறிய ஜோதிடர் சிரகுமார் என்பதை நாடி வினோத் குறி கேட்டுள்ளார்.

ஆனால் ஒருவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறியும் சக்தி தன்னிடம் இல்லை என சிரகுமார் கூறியுள்ளார்.

மத்திய கொழும்பில் உள்ள சவக்கிடங்கில் சென்று பார்த்தபோதும் வினோத் தாய் வேலுசாமி குறித்த தகவல் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என தெரியாமல் வினோத் தவித்து வருகிறார்.

வினோத் கூறுகையில், என் அம்மா குறித்து எல்லா இடத்திலும் விசாரித்தும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

சம்பவதன்று புனித அந்தோணியர் தேவாலயத்துக்கு என் அம்மா சென்றார், அப்போது தான் கடைசியாக அவரை பார்த்தேன், தேவாலயம் எங்கள் வீட்டருகில் உள்ளது என கூறினார்.

வினோத் குடும்பம் ஹிந்துவாக இருந்தாலும், அவர் தாய் வேலுசாமி கிறிஸ்துவ கத்தோலிக சடங்குகள் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்