இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

Report Print Kavitha in இலங்கை

கடந்த ஞாயிறு ஈஸ்டர் தினத்தன்று இலங்கை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படத்தை இலங்கை பொலிஸார் வெளியிட்டு உள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

இதில் 359 பேர் இறந்துள்ளதாகவும் 500 மேற்பட்டோர் காயமடைந்தாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஆறுபேர் குறித்த தகவல்களை பொலிஸார் அவர்களது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவர்களை பார்த்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை பொலிசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா

மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான்

பாதிமா லதீபா

மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக்

மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக்

அப்துல் காதர் பாத்திமா காதியா

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...