இளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை!

Report Print Vijay Amburore in இலங்கை

தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்களில் தவறுதலாக அமெரிக்க இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 3 தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 359 பேர் பலியாகினர்.

மேலும் 500க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக, இலங்கை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஆறுபேர் குறித்த தகவல்களை பொலிஸார் இன்று அவர்களது புகைப்படத்துடன் வெளியிட்டனர்.

மேலும் இவர்களை பார்த்தால் உடனடியாக தகவல் கொடுக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.

அதில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான அமரா மஜீத் என்கிற இளம்பெண்ணின் புகைப்படம் 'அப்துல் காதர் பாத்திமா காதியா' என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது.

இது தவறான தகவல் என அந்த பெண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்ததை அடுத்து, இலங்கை அரசு அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...