இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கையால் பரபரப்பு

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் தீவிரவாதிகளால் மேலும் வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என கொழும்பு நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிக்கையில், இலங்கை அதிகாரிகள் தகவல் பகிர்ந்துள்ளதாகவும், தொழுகை நடைபெறும் பகுதிகளை தீவிரவாதிகள் குறிவைக்கலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

வார இறுதி நாட்கள் என்பதால் குறித்த பகுதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் ஏப்ரல் 26 முதல் 28 ஆம் திகதி வரை அவதானம் தேவை எனவும் அந்த அறிக்கையில் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மட்டுமின்றி எச்சரிக்கையுடனும், பெரும் ஜனக் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து இலங்கையை குறிவைத்து வருவதாகவும், எச்சரிக்கை ஏதுமின்றி அவர்கள் தாக்குதல் நடத்தக் கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொழுதுபோக்கு நிலையங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தை மையங்கள், ஷாப்பிங் மால்கள், அரசாங்க வசதிகள், விடுதிகள், கிளப், உணவகங்கள், வணக்க வழிபாட்டு இடங்கள்,

பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுப் பகுதிகளை தீவிரவாதிகள் இலக்கு வைக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்