இலங்கையில் இன்று முதல் புதிய தடை

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் புர்கா அணிவது இன்று முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தியும், அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பிறகு அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்