யாழில் அதிரடிபடையினர் கண்டறிந்த பதுங்குகுழி - தப்பி ஓடிய தொழிலதிபர்...?

Report Print Abisha in இலங்கை

அதிரடிபடையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குகுழி தொடர்பில் விசாரணைகள் துவங்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில், நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லுாாி வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் இருப்பது சிறப்பு அதிரடிப் படையினரால் பதுக்குழி கண்டறியப்பட்டுள்ளது.

இதில், இரண்டு மாடி வீட்டின் நிலத்திற்கு கீழ் யாருக்கும் தெரியாத வகையில் பதுங்குகுழி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதுங்கு குழி 25 மீற்றர் உயரத்திலும் 15 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தகடுகளினால் மூடிய பாதுகாப்பு கதவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பதுங்கு குழிக்கு முழுமையான மின்சார வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இது அமைந்துள்ள வீடு, கொழும்பை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் சொந்த வீடு இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவர் வழங்கி பல தகவல்களின்படி அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஒரு தொழிலதிபரின் மகன்தான் தற்கொலைதாரியாக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்