இலங்கை தற்கொலை குண்டுதாரிகளின் சகோதரர் கைது: ஜேர்மனில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பறிமுதல்

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பில் உள்ள ஷங்கரில்லா ஹொட்டல் மற்றும் சின்னமன் ஹொட்டலில் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் மூத்த சகோதரர் முகமது இப்ராகிம் இர்பான் அகமத் தெமட்டகொடவில் தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டபோது, ஜேர்மனில் தயாரிக்கப்பட்ட ஒரு air rifle, இரண்டு வாள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தும் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலதிபர் முகமது இப்ராமிக்கு 9 பிள்ளைகள் ஆவர். அவர்களில் இரண்டு பேர் கொழும்பில் உள்ள ஷங்கரில்லா ஹொட்டல் மற்றும் சின்னமன் ஹொட்டலில் தற்கொலைதாரியாக செயல்பட்டவர்கள்.

தற்போது, மூன்றாவதாக மற்றொரு மகன் இர்பான் அகமத் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்