நான் சாமி பேசுகிறேன்..... இலங்கையை போன்று தமிழகத்தில் குண்டு வெடிக்கும்: வீடியோ வெளியிட்ட மர்மநபரை தேடும் பொலிஸ்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் போன்று தமிழகத்திலும் மூன்று இடங்களில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுத்த மர்ம நபர் தற்போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளதால் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 6 மணிக்கு அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர் “நான் சாமி பேசுகிறேன். இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது போல் தமிழகத்திலும் இன்னும் 3 மாதத்தில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெறும்” என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

சைபர் கிரைம் உதவியுடன் பொலிசார் நடத்திய விசாரணையில் அந்த போன் கால் மதுரையில் இருந்து வந்துள்ளது என தெரியவந்தது.

மர்மநபரை பொலிசார் தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கவிருக்கிறேன், மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இதில் தொடர்பு உள்ளது, இதனால் நான் டிஜிபியிடம் பேசிக்கொள்கிறேன் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக அந்த மர்மநபர், சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் பல வகையில் தொடர்பு என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

குறித்த வீடியோ தமிழகத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்