ரம்ஜானுக்கு முன்னர் அடுத்த தாக்குதல் முன்னெடுக்க தீவிரவாதிகள் திட்டம்: உச்சகட்ட பாதுகாப்பில் இலங்கை

Report Print Arbin Arbin in இலங்கை

ரம்ஜானுக்கு முன்னர் மீண்டும் தாக்குதலை முன்னெடுக்க ஐ.எஸ் திட்டமிட்டு வருவதாக உளவு அமைப்புகள் கண்டறிந்ததை அடுத்து இலங்கையில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அமைச்சக பாதுகாப்பு பிரிவின் தலைவர் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஞாயிறு அல்லது திங்கட்கிழமை எந்த தாக்குதலும் முன்னெடுக்கபடவில்லை.

இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலையடுத்து, தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் டசின் கணக்கிலான ஐ.எஸ் ஆதரவாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் சில நாட்கள் அல்லது தற்போதைய சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் இதே உச்சகட்ட பாதுகாப்பு அமுலில் இருக்கும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி ரம்ஜான் மாதம் துவங்கும் முன்னர் கடுமையான ஒரு தாக்குதலை ஐ.எஸ் முன்னெடுக்க வாய்ப்பு உள்ளதாக உளவு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன் காரணமாக பொலிஸ் மற்றும் ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் 6 ஆம் திகதி ரம்ஜான் மாதம் துவங்குகிறது. முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பொதுவெளியில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது.

மேலும், சஹ்ரான் ஹாஷிமின் பேச்சுக்கள் கேட்டு ஈர்க்கப்பட்ட 29 வயது இளைஞன், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை இந்தியாவின் கேரள மாநிலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டது அங்குள்ள உளவு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி குறித்த இளைஞரை கைது செய்துள்ளதாகவும், அங்குள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்