இலங்கை தற்கொலை தாக்குதலில் எனது அன்பான குடும்பத்தை இழந்துவிட்டேன்: தாயின் கண்ணீர்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுதாக்குதலில் தனது அன்பான குடும்பத்தையே இழந்துவிட்ட பெண்ணின் நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதிரான பிரதேசத்தை சேர்ந்த சந்திமான நெரன்ஞனி யசவர்தன என்ற பெண் நடந்தவை குறித்து கூறியுள்ளதாவது, கடந்த 21 ஆம் திகதி நீர்கொழும்பு கட்டான தேவாலயத்திற்கு எனது குடும்பத்தினர் அனைவரும் சென்றோம்.

எனது இரண்டு மகள்களும் நானும் ஒரு வரிசையிலும், எனது கணவர் பின்வரிசையிலும் அமர்ந்திருந்தார். திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

இரண்டு மகள்களும் எனது காலில் விழுந்து கிடந்தனர், தாக்குதலால் எனது கண் சரியாக தெரியவில்லை, எனது மகள்களை தூக்க முடியாமல் என்ன நடக்கிறது என தெரியாமல் உணர்வற்று இருந்தேன்.

எனது கணவரும் பின்வரிசையில் விழுந்து கிடந்தார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் பித்துப்பிடித்தவள் போல் எனது குடும்பத்தினரை தேடினேன். எனது இளைய மகளை மட்டுமே பார்த்தேன், ஆனால் அவளும் இறந்துவிட்டாள்.

இறுதியில் தான் எனது அன்பான குடும்ப உறவுகள் இறந்துவிட்டது எனக்கு தெரியவந்தது. அவர்களை இழந்துவிட்டதால் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன், என்னால் அதனை தாங்கிகொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்