வழக்கம் போல இயங்கும் பேருந்துகள்! இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இலங்கை மக்கள்.... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நாட்டு மக்களை பெரிதும் பாதித்தது.

இந்நிலையில் அந்த பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வரும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

அதாவது ஊரடங்கு உத்தரவு போன்ற விடயங்கள் இலங்கையில் தற்போது நடைமுறையில் இல்லை, கடைகள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளன.

வழக்கம் போல பேருந்துகள், ரயில்கள் ஓட துவங்கியுள்ளன.

அதே நேரத்தில் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேடுதல் வேட்டையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்