இலங்கை தற்கொலை வெடிகுண்டுதாரிகள் தாக்குதலுக்கு தெரிவானது எப்படி? வெளிவரும் பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கை தற்கொலை தாக்குதல் பிரதான சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாஷிம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தற்கொலை வெடிகுண்டுதாரிகளை தெரிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பொருட்டு பல மாதங்கள் ஹாஷிம் முயற்சி மேற்கொண்டு 6 இளைஞர்களை இணங்க வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் நாளில் முன்னெடுக்கப்பட்ட அந்த கொலைவெறி தாக்குதலில் கிறிஸ்தவர்களும் வெளிநாட்டவர்களுமே இரையாகியுள்ளனர்.

ஆனால் அந்த தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமிய சமூகத்தினரே கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலின் ஒருபகுதியாக ஷாங்கரி லா ஹொட்டலில் நடந்த தாக்குதலில் ஹாஷிம் கொல்லப்பட்டான்.

இவனது பேச்சுக்களில் ஈர்க்கப்பட்ட இரு சகோதரர்களே இலாம் இப்ராஹிம் மற்றும் இன்ஷாஃப் இப்ராஹிம்.

செல்வந்தர்களான இருவரும் குறித்த தாக்குதலுக்கு பொருளுதவியும் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஹாஷிமின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பேச்சுக்களே இவர்களையும் ஈர்த்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மசூதிகளில் தொழுகைக்கு அடிக்கடி செல்லாதவர்கள் என்றாலும் இலாம் இப்ராஹிம் மற்றும் இன்ஷாஃப் இப்ராஹிம் ஆகிய இருவரும் நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்கள் என அவர்களது சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஹாஷிம் தமது பேஸ்புக் உரைகளில், வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வந்துள்ளான்.

இதில் ஹாஷிம் 6 பேரை தெரிவு செய்துள்ளதும், அவர்களுக்கு தனியாக சேட் மூலம் தொடர்பு வைத்துக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது.

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நால்வர் சகோதரர்கள் என்பதும், அதில் இருவர் இப்ராஹிம் சகோதரர்கள் என கூறப்படுகிறது.

பல மாத ஆயத்தப்பணிகளுக்கு முடிவில், ஈஸ்டர் நாளை தங்களின் இலக்காக முடிவு செய்துள்ளனர்.

இதில், சமுத்ரா கிராண்ட் ஹொட்டலை இலக்கு வைத்து இயங்கிய அப்துல் லத்தீஃப், பின்னர் அந்த திட்டம் தோல்வியில் முடியவே, சில மணி நேரங்களுக்கு பின்னர் இன்னொரு விடுதியில் வைத்து வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டான்.

சமுத்ரா ஹொட்டல் பயங்கரவாதிகளின் திட்டத்திற்கு இரையாகியிருந்தால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.

அப்துல் லத்தீஃப் அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்றவன். ஹாஷிமின் பேஸ்புக் பதிவுகளால் ஈர்க்கப்பட்டவன்.

மேலும், 3 தேவலயங்களில் தாக்குதல் நடத்திய மூவரையும் பெருவாரியான இஸ்லாமிய சமூக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அல்ல எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers