மட்டக்களப்பில் கடைசி நேரத்தில் இலக்கை மாற்றி தாக்குதல் நடத்திய பயங்கரவாதி!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுள் ஒருவன் கடைசி நேரத்தில் தன்னுடைய இலக்கை மாற்றி சீயோன் ஆலயத்தில் தாக்குதல் நடத்தியுள்ளான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் முக்கியமான 3 தேவாலயங்கள் மற்றும் 3 ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 253 அப்பாவி பொதுமக்கள் பலியானதோடு, 500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய முகம்மது நாசர் முகமத் அசார் (34) என்கிற பயங்கரவாதி கடைசி நேரத்தில் தன்னுடைய இலக்கை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகம்மது நாசர் முதலில் தாக்குதல் நடத்துவதற்கு மட்டக்களப்பு பகுதியில் உள்ள செயின்ட் மேரி கதீட்ரல் ஆலயத்தை தான் தேர்வு செய்துள்ளான்.

தன்னுடைய காரில் சரியாக 8.30 மணிக்கு முகம்மது நாசர் ஆலயத்திற்கு வருகை தந்துளான். ஆனால் அதற்க்குள் அங்கு பிராத்தனை முடிந்து பொதுமக்கள் அனைவரும் சென்றுவிட்டதாக பாதிரியார் தற்கொலைதாரியிடம் கூறியுள்ளார்.

உடனே அருகாமையில் இருந்த சீயோன் தேவாலயத்திற்கு சென்று அங்கு தாக்குதல் நடத்தியுள்ளான் . அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதோடு, 70 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்