இலங்கையில் அவசர தொடர்புகளுக்காக புதிய தொலைபேசி எண் அறிவிப்பு

Report Print Basu in இலங்கை

இலங்கையில் அசாராதண சூழல் நிலவு வரும் நிலையில் அரசாங்கும் அவசர தொடர்புகளுக்காக புதிய தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாக்குதலை தொடர்ந்து நாட்டில் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவசர தொடர்புகளுக்காக 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன் படி அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகதிற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையாகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்