இலங்கையில் குறிப்பிட்ட மதத்தினர் மீது தொடரும் தாக்குதல் சம்பவம்...

Report Print Abisha in இலங்கை

இலங்கையில் இன்று இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டது.

இந்நிலையில் கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் இஸ்லாமியருக்கு சொந்தமான வாகனம் மற்றும் கடைகள் மீது கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இது குறித்து (https://edition.cnn.com/2019/05/07/asia/sri-lanka-clashes-christian-mob-intl/index.html) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில், போருடோடா கிராமத்தில், முஸ்லீம் ஒருவர் ஓட்டிச்சென்ற டக் டக் வாகனத்தை, கத்தோலிக்க கிறிஸ்தவ குழு ஒன்று வழி மறித்து நிறுத்தியுள்ளது.பின்பு, அந்த வாகனத்தை சோதனையிட வேண்டும் என்று அந்த குழுவினர் முரண்டுபிடித்துள்ளனர். இதற்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் மறுப்பு தெரிவிக்கவே, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, முஸ்லீம் இளைஞர் ஓட்டிச் சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதோடு, முஸ்லீம்களுக்கு சொந்தமான இரு கடைகளும் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இது குறித்து, இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர், ருவான் குணசேகரா தெரிவிக்கையில், குடிகாரர்கள் குழுவிற்கு நடுவேயான மோதல்தான், இறுதியில்,கலவரமாக மாறியது என்றும், கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட அறிக்கையொன்றில்,இந்த கலவரத்தில் உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கொழும்பு மண்டல கத்தோலிக்க பேராயர், கார்டினல் மால்கம் ரஞ்சித், மது போதை மனிதர்களை கொடிய மிருகத்தைவிட மோசமாக்கிவிடுகின்றது.

மோதல் சம்பவத்திற்கு காரணம், மதுபோதையில் இருந்த கும்பல்தான், என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அமைப்பு தலைவர் Zahran Hashim, ஈஸ்டர் தினத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து அதன் பெயரில் இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில் இது போன்று இஸ்லாமியர்கள் மீதானதாக்குதல் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்