இலங்கை குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி அளித்த சீனா... எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளதால், அவர்களுக்கு உதவ சீனா நிதியுதவி அளித்துள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் ஹோட்டல் மற்றும் தேவாலயங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலால் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஈஸ்டர் தினத்தன்றுநடந்த தாக்குதலால் காயமடைந்தவர்களுளின் சிகிச்சைக்காக உதவ சீனா நிதியுதவி அளித்துள்ளது. அதன் படி 100,000 அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பில் 1,75,48,000 கோடி ரூபாய்) கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers