மே 14ம் திகதிக்கு முன் கண்டிப்பாக இதை செய்துவிடுங்கள்...பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் வேண்டுகோள்

Report Print Basu in இலங்கை

எதிர்வரும் மே 14ம் திகதிக்கு முன்னர் அனுமதி இல்லாமல் வெடிப்பொருட்கள் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிக்கி 250 பேர் கொல்லப்பட்டனர், 500 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சோதனையில் ஈடுபட்ட பொலிசார், சட்டவிரோதமாக வைத்திருந்த வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பில் பலரை கைது செய்துள்ளனர்.

தற்போது, அதன் தொடர்ச்சியாக வெடிப்பொருட்கள், ஆயுதங்கள், பயங்கரவாதிகள், மறைவிடங்கள் மற்றும் பிற பொருட்கள் கண்டறியும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அனுமதி இல்லாமல் வைத்திருக்கும் வெடிப்பொருட்களை, மே 14ம் திகதி முன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் தரப்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.,

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்