இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க இலங்கை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இலங்கை குடிமக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும், தவறான தகவல்களால் தூண்டப்பட்டுவிடகக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு படையினர் அயராது உழைத்து வருகின்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் உள்நாட்டில் அமைதியின்மை காரணமாக அவர்களின் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதானல், தொடர்ந்து நடக்கும் விசாரணைகள் பாதிக்கப்படுகின்றது என பதிவிட்டுள்ளார்.
I appeal to all citizens to remain calm and not be swayed by false information. Security forces are working tirelessly to apprehend terrorists and ensure the security of the country, but each time there is civil unrest, we increase their burden and hamper ongoing investigations.
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 13, 2019