ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படம் வெளியானது: பொதுமக்கள் உதவ கோரிக்கை

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதலை அடுத்து வேன் ஒன்று வெடித்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விரைவாக பொலிசாரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி Kochchikade அந்தோனியார் தேவாலயத்தின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று வெடித்துச் சிதறியது.

சம்பவத்தின்போது அந்த வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வாகனமானது அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிசார் அப்போது சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலையே, அந்த வாகனம் தொடர்பில் சந்தேகத்துக்குரிய நால்வரின் வரைபடங்களை பொலிசார் வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்