இவர்கள் தான் தீவிரவாதி... இலங்கை வீழ வேண்டும் என விரும்புகிறார்கள்... கொந்தளித்த மஹேலா ஜெயவர்தனே

Report Print Raju Raju in இலங்கை

வன்முறையை உருவாக்குபவர்கள் தீவிரவாதிகள் எனவும் அவர்கள் இலங்கையை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்வதாகவும் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இஸ்லாமியர்களின் நிர்வாக நிலையங்கள் மற்றும் மசூதிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இது தொடர்பாக இலங்கை பிரபலங்கள் பலர் கருத்து கூறி வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், அரசியல் உள்நோக்கம் கொண்ட விடயங்களில் நாம் சிக்கி கொள்ளக்கூடாது, வன்முறையை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும் தீவிரவாதி தான், நாடு வீழவேண்டும் என அவர்கள் விரும்புவார்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்