இலங்கையில் கையில் ஆயுதங்களுடன் முகத்தை மூடிக் கொண்டு சேதப்படுத்திய நபர்கள்! வெளியான சிசிடிவி காட்சி

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் முகமூடி அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பலரும் அதிவேகமாக கையில் ஆயுதங்களுடன் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நேற்று நாட்டில் நிலவிய அமைதியின்மை காரணமாக சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இதற்கு காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் குருணாகல் மற்றும் அக்குரணை பகுதியில் ஹெல்மட்டால் முகத்தை மூடியிருந்த நபர்கள் சிலர் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் கையில் உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் அங்கிருக்கு குடியிருப்பு பகுதியில் நுழைந்து சேதப்படுத்தியுள்ளனர்.

அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அந்த நபர்கள் எல்லாம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை அங்கிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்