இலங்கையில் நடந்த வன்முறையில் இறந்தவர் யார்? நடந்தது என்ன? வெளியான முழுத்தகவல்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் கடந்த திங்கட் கிழமை நடந்த வன்முறையில் போசுல் அமீன் என்ற நபர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரைப் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டர்முல்லாவின் நட்டிண்டியா பகுதியில் இருக்கும் பர்னிச்சர் ஷாப்பின் உரிமையாளர் தான் M.S. Fouzul Ameen. 49 வயதான இவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்கள் 16 வயதிலிருந்து 6 வயது வரை உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை மாலை இவரது விட்டின் மற்றும் ஜன்னல் மீது கல்லால் எறிந்ததால், வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே இருந்தனர், அப்போது திடீரென்று அங்கிருந்த அவரின் வாகனத்தை சேதப்படுத்தியதால், வீட்டின் வெளியே வந்த போது 5 பேர் கொண்ட கும்பர் அவரை தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகிலிருக்கும் Marawila மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

தந்தை இறந்த சோகத்தில் அவரின் மகன் எதுவும் பேசமுடியாமல் சோகத்தில் இருக்கிறார். அதே சமயம்

M.S. Fouzul Ameen மாமா இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, நாங்கள் தீவிரவாதிகள் இல்லை, பயங்கராவாதிகள் செய்யும் செயலை தடுக்க இங்கே யாரும் இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers