நாங்கள் ஆட்களை அனுப்புகிறோம்! பிரச்சனையை சரி செய்யுங்கள்... இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா?

Report Print Raju Raju in இலங்கை

இலங்கைக்கு தொழில்நுட்ப விடயங்களில் உதவி செய்ய சீனா உறுதியளித்துள்ள நிலையில் அந்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் சில போலியான செய்திகள் பரப்பப்பட்ட நிலையில் சமூகவலைதளங்கள் சில நாட்கள் முடக்கப்பட்டு பின்னர் அதன் மீதான தடைகள் நீக்கப்பட்டது.

இதே போல இரு தினங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் மசூதிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் சமூகவலைதளங்கள் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது. இது தொடர்பான செய்தி @SriLankaTweet டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீன ஜனாதிபதியிடம் பேசிய இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, சமூகவலைதளங்களில் போலியான தகவல்களை பரப்பும் தனிநபரை கண்டுப்பிடிக்கும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உபகரணங்கள் எங்களிடம் இல்லை என கூறினார்.

இதற்கு பதிலளித்த சீன ஜனாதிபதி, இதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உபகரணங்களை சீனா வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம் போலியான செய்திகள் பரவுவதை தடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்